Sunday, February 10, 2013

உள்ளூர் குளம் தீர்த்தக்குளம் ஆகாது என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர்...


இலண்டன் மாநகர தொடர்வண்டி
பருவ பயண அட்டையைப் புதுப்பிக்கவும்
மற்றும் தொடர்வண்டி பயணச் சீட்டைப் பெறுவதற்கும்
தானியங்கி இயந்திர சேவையில்
தமிழுக்கும் இடம் உண்டு.
மற்ற ஐரோப்பிய மொழிகளிலும்
இந்த சேவையைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இந்திய நாடு சுதந்திரம் பெற்று
65 ஆண்டுகளாகியும்
தொடர்வண்டியில் செல்வதற்கு
தமிழில் முன்பதிவு செய்ய முடியாது.
தமிழில் பயணிகள் பெயர்களைப் பார்க்க முடியாது. தமிழில் அறிவிப்புகள் பார்க்க முடியாது.
அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலம் தான்.

இங்கிலாந்து நாட்டைப் போல் இந்தியாவும்
தனது மொழித் தீண்டாமைக் கொள்கையைக் கைவிட வேண்டும். அனைத்து இன மக்களையும்
சமமாகப் பாவிக்க வேண்டும்.
அப்போது தான் உலகின் தொன்மையான தமிழ் மொழிக்கு விடுதலை கிடைக்கும்.

அகரமுதலி
படம் உதவி : தீசன் ராமநாதன் — அருண் குமார் தூத்துக்குடி உடன்

No comments: